ஸ்ரீதேவியின் அஸ்தி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கரைக்கப்பட்டது!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்பட்ட நடிகை ஸ்ரீதேவி. உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார்.

மாரடைப்பால் அவர் உயரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் மதுபோதையில் குளியறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததிருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பல்வேறு விசாரணைக்குப் பின்னர்அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு இந்திய திரையுலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தியுடன் அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி உள்ளிட்ட உறவினர்கள் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டிற்கு அவர்கள் சென்றனர். அதன் பின்னர் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்க திட்டமிட்டிருந்த அவர்கள் கடைசி நேரத்தில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]