மருத்துவரை மணக்கிறாரா ஸ்ரீதிவ்யா? திரையுலகினர் அதிர்ச்சி

நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் கார்த்தியுடன் காஷ்மோரா படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிம்பு, தனுஷ் என இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், அம்மணிக்கு கவர்ச்சி என்றால் ஆகவே ஆகாது.

என் உடல் வாகிற்கு குட்டி குட்டி உடைகள் செட் ஆகாது என்று கூறிவிடுவார். இதனால், கவர்ச்சி காட்சிகள் இருந்தாலே படத்திற்கு நோ சொல்லி எஸ் ஆகிவிடுவார் ஸ்ரீதிவ்யா. இதனால் தான் பெரிய பட வாய்ப்புகள் இவரை நழுவி சென்றது.

ஸ்ரீதிவ்யா

விஜயின் பைரவா படத்தில் இவர் தான் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அப்போது பீக்கில் இருந்த கீர்த்தி சுரேஷ் தட்டி பறித்து கொண்டார் என்ற பேச்சும் உண்டு. இந்நிலையில், புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க இவரது குடும்பத்தார் முடிவு எடுத்துள்ளார்கள் என கூறுகிறார்கள். ஸ்ரீதிவ்யா இவருக்கு நெருக்கமான மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும்.

ஸ்ரீதிவ்யா

வீட்டில் சம்மதம் தெரிவித்தால் விரைவில் ஸ்ரீதிவ்யாவிற்கு திருமணம் நடக்கும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அனேகமாக, ஸ்ரீதிவ்யா தான் காதலிக்கும் அந்த மருத்துவரைத்தான் மனம் முடிப்பார் என கூறுகிறார்கள். மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறுகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]