ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு- பிசிசிஐ

ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேரள மாநில ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்ய இருக்கிறது.

இந்திய அணியில் இடம்பிடித்திருந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீசாந்தை கைது செய்தது. இதனால் பிசிசிஐ ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடைவிதித்தது.

டெல்லி கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் பிசிசிஐ அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க இயலாது என்று கூறிவிட்டது.

இதனால் ஸ்ரீசாந்த் பிசிசிஐ தடையை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க பிசிசிஐ-க்கு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ சார்பில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இந்த தகவலை பிசிசிஐ-யில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ஐகோர்ட்டின் உத்தரவை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது முக்கியமானது. இன்னும் ஒரு வாரத்திற்குள் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்படும்.

முறைகேடு மற்றும் மேடச் பிக்சிங் போன்றவற்றை துளியளவும் சகித்துக்கொள்வதில்லை என்ற முடிவில் பிசிசிஐ உறுதியாக உள்ளது’’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]