ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என தமிழக அரசு அரசாணை

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் துப்பாக்கிச் சூடு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இத் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்றையதினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் இடையே ஓர் ஆலோசனை நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என தமிழக அரசு இன்றுமாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலைக்கு சீல், அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் வைக்கபட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]