ஷேன் வாட்சன் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய தோனி 5, பில்லிங்ஸ் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக விளையாட சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

205 ரன்கள் என்ற வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே, ஹெயின்ரிச் கிளாசென் ஆகியோர் களமிறங்கினர். கிளாசன் 7 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரரான ரகானே 16 ரன்னில் ஆட்டமிழந்தனர். அப்போது ராஜஸ்தான் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

நடுவரிசையில் கமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். பட்லர் 22 ரன்னிலும், ராகுல் திரிபாதி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சென்னை அணி பந்துவீச்சில் தீபக் சஹார், ஷர்துல் தாகுர், வெய்ன் பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]