முத்தத்திற்கு பேர் போன ஷாலினி பாண்டே தமிழில்

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களின் கனவுக் கன்னியாக உயர்ந்தவர்தான் ஷாலினி பாண்டே. அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போது அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘1௦௦% காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். டான் சாண்டி எனும் புதிய இயக்குனர் இயக்கும் பெயரிடப்படாத இப்படம் ஹீஸ்ட் காமெடி ஜானரில் உருவாகிறது. இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். அடுத்த மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விஜய் ராகவேந்திரா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]