ஷாருக்கை காண அலைமோதிய ரசிகர் பட்டாளம்: ஒருவர் பலி

ஷாருக்கான் நடித்த ‘ராயீஸ்’ படத்தை வித்யாசமான முறையில் புரொமோஷன் செய்வதாக கூறி, மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் அகஸ்த் கிராந்தி ராஜ்தானி விரைவு ரயிலில் படக்குழுவினருடன் ஷாருக்கான் பயணம் செய்தார். இந்த தகவல் காட்டு தீ போல் பரவிய நிலையில், வதோதரா ரயில் நிலையத்தில் தங்கள் சூப்பர் ஸ்டாரை காண ஆயிரம் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

raees

இந்த நிலையில், மேற்படி ரயில் சரியாக 10:30 மணிக்கு வதோதரா ரயில் நிலையத்தின்  6வது நடைமேடைக்கு வந்தது. 10 நிமிடங்கள் தான் ரயில் அங்கே நிற்கும் என அறிவிக்கப்பட, உடனடியாக களத்தில் குதித்த ரசிகர்கள், ஷாருக்கான் பயணம் செய்த ரயிலில் ஏற முயன்றுள்ளனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் முண்டியடித்ததால், உடனடியாக ரயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் படி கட்டளை இடப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் ஏற முயன்றவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயிலுடன் சேர்ந்து ரசிகர்கள் ஓடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் பலியானதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.