காதல் நாயகன் என்று பல புனை பெயர்களை கொண்டு அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் வாழும் அரண்மனையின் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும், நடிகர் ஷாருக்கான் திரைப்படத்தில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நாயகனாக திகழ்கிறார்.

நடிகர் ஷாருக்கான் கட்டிய வீடானது, அவரின் வீட்டு வாசலில் இருந்து குளியலறை, சமையலறை, படுக்கையறை, முற்றம், விருந்தினர் வரவேற்பு இடம் என்று அனைத்து இடமுமே பண்டைய காலத்து அரண்மனையைப் போலவே கட்டப்பட்டுள்ளது.

மேலும் ஷாருக்கான் கட்டிய இந்த அரண்மனை போன்ற மன்னத் இல்லமானது, அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை மாளிகை போன்று காட்சியளிப்பதாகவும் பலர் குறிப்பிடுகின்றனர்.

தோட்டம்

மாநகராட்சி பூங்காவின் அளவை விட பெரிதாக காட்சியளிக்கும் ஷாருக்கான் வீட்டுத் தோட்டம்.

நீச்சல் குளம்

நீச்சல் குளத்தின் ஒரு ஓரமாய் தென்னை மரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அதிகமாக இருப்பதால், கோவா சுற்றுலாவை போல காட்சியளிக்கும் ஷாருக்கான் வீட்டு நீச்சல் குளம்.

வளாகம்

முன் பக்கம் பாதை இருந்தும் பின் பக்கத்திற்கு செல்லும் வளாக வழி அமைக்கப்பட்டிருப்பதால், நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கும் ஷாருக்கான் வீட்டு வளாகம்.

குளிக்கும் அறை

ஷாருக்கான் கட்டிய வீட்டின் குளியலறையில் உள்ள தண்ணீர் குழாய் போன்ற அனைத்தும் தங்கத்தில் செய்யப்பட்டதுடன், அந்த அறையில் டி.வி, அலைப்பேசி மற்றும் கம்ப்யூட்டர் போன்ற அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படுக்கும் அறை

இராஜ அரண்மனை போல அலங்காரம் செய்யப்பட்ட கட்டில், அதன் மேல் உயர்ரகம் கொண்ட வெல்வெட் கம்பளங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டதால், இந்த அறை ராஜாக்களின் அந்தப்புரம் போல் காட்சியளிக்கிறது.

வரவேற்பு அறை

விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்கும் வகையில், மாடர்ன் மற்றும் பண்டையக் காலத் தோற்றம் ஆகிய இரண்டும் கலந்த கலவையாக காட்சியளிக்கிறது ஷாருக்கான் வீட்டு வரவேற்பு அறை.

விருந்தோம்பல் அறை

ஷாருக்கான் கட்டிய வீட்டில் உணவு சாப்பிடும் அறையானது, அழகான இராஜ அரண்மனையை போன்று காட்சியளிக்கிறது.

ஷாருக்கான்

விருந்தினர் அறை

ஷாருக்கான் வீட்டின் விருந்தினர் அறையானது, விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, மெய் சிலிர்க்கும் வண்ணத்தில் வைக்கும் அழகான பெரிய அரண்மனையை போன்று காட்சி தருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]