ஷாருக்கானின் கேண்டீன் இடிப்பு

ஷாருக்கானின் கேண்டீன் இடிப்பு.

மும்பை மலாடு மேற்கு, பார்க் என்ற 16 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான திரைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில் நடிகர் ஷாருக்கான் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கேண்டீன் நடத்தி வந்தார்.

ஷாருக்கானின் கேண்டீன் இடிப்பு

நடிகரின் திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கேண்டீனை பயன்படுத்தி வந்தனர்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த கேண்டீனை இடிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை மாநகராட்சியினர் நோட்டீஸ் அனுப்பினர்.

எனினும் நடிகர் ஷாருக்கான் தரப்பினர் மாநகராட்சியின் நோட்டீசுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நீதிமனறில் முறையிட்டனர்.

ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியினர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேண்டீனை இடித்து அகற்றியுள்ளனர்.