வால்ட்டிஸ்னி நிறுவனமும் சீனாவின் ஷாங்காய் செண்டி குருப்பும் இணைந்து உருவாக்கிய அழகிய சுற்றுலாத்தளம் Shanghai Disneyland Park.
இந்த வருடம் ஜூன் மாதம் 16ம் திகதி திறக்கப்பட்ட ஷாங்காய் டிஸ்னிலான்ட் பார்க் முதன் முதலாக தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்தியது.

20மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம் பார்க்கின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது. வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் பிரமாண்டத்தை தருவதோடு,அந்த பகுதிக்கே தனித்துவமான அழகினை தரும் விதத்தில் அமைந்திருந்தது

டிஸ்னியின் கதாபாத்திரங்களின் உருவ பொம்மைகள் ,அந்த கதை பிரதேசம்,அரண்மனை என்பவை புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன.

டிஸ்னி கதாபாத்திரங்களின் வீதி உலா ,கதைத்தளங்கள் அத்தோடு படகுசவாரி,மாபெரும் அரண்மனைகள் ,பலூன்கள் ,ரோலர்கோஸ்ட் சவாரி உட்பட பல விடயங்கள்
சிறுவர் முதல் பெரியவர் வரை கவரும் வண்ணமாக காணப்படுகின்றன
அதுவும் இந்த கிறிஸ்துமஸ்காக இன்னும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டது இந்த  டிஸ்னி பார்க்.