முகப்பு Cinema ஷங்கரின் 2.0 படத்தின் கிளைமேக்ஸ் இதுவா?

ஷங்கரின் 2.0 படத்தின் கிளைமேக்ஸ் இதுவா?

ஷங்கரின் 2.0 படத்தின் கிளைமேக்ஸ் இதுவா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0.

இப்படத்தின் டீசர் நாளை பிரமாண்டமாக வரவுள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே ஒரு பேட்டியில் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்த போது நானே அதிர்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

எனவே இப்படத்தின் டீசர் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ 540 கோடியை தாண்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது படத்தின் கிளைமேக்ஸ் குறித்து ஒரு சில தகவல்கள் வந்துள்ளது.

சமீபத்தில் வெளியான போஸ்ட்ரை வைத்து பார்க்கையில் ராட்சத கழுகு கிளைமேக்ஸில் வரும், அதை சிட்டி எப்படி கொன்று, மக்களை காப்பாற்றுகின்றது என்பதே கிளைமேக்ஸ் என தெரிகின்றது.

மேலும், இந்த ராட்சஸ கழுகு, ஹொலிவுட் படமான ட்ரான்ஃபார்மர்ஸ் படத்தில் வருவது போல் எலக்ட்ரானிக் வகையாகவும் இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com