ஷங்கரிடம் பட வாய்ப்பு கேட்டு கெஞ்சிய நடிகர் விக்ரம்!!

இயக்குனர் ஷங்கர் ‘காதலன்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது நடிகர் விக்ரம் ஷங்கரிடம் பட வாய்ப்பு கேட்டு கெஞ்சினாராம்.

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் வரிசையில் இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் பலரும் தவம் இருந்து வருகின்றனர். ஆனால், ஷங்கர் இயக்கத்தில் இரண்டு படத்தில் நடித்து விட்டார் நடிகர் விக்ரம். அவர் நடித்த இரண்டு படங்களுக்கும் பல விருதுகள் கிடைத்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ‘காதலன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் படத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு நடிகர் விக்ரம் டப்பிங் கொடுத்தார். ‘காதலன்’ பட டப்பிங் முடிந்தவுடன் இயக்குனர் ஷங்கரிடம் ‘சார் உங்கள் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று விக்ரம் கெஞ்சினாராம்.

விக்ரம் அப்போது நினைத்திருக்க மாட்டார், ஷங்கர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிப்போம் என்று. இன்று ஷங்கரே தன் படத்தில் நடித்த நடிகர்களில் விக்ரம் மிகச் சிறந்தவர் என்று பாராட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]