ஶ்ரீலங்கன் விமான நிறுவன சேவைகளில் தாமதம்

ஶ்ரீலங்கன் விமான நிறுவன சேவை

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் இன்றும் சில மணிநேர தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொச்சினில் பறவை ஒன்று விமானத்தில் மோதிய காரணத்தால், இரண்டு விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்பு கொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கன் விமானசேவை அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக 0094 197 331 979 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]