வௌ்ளவத்தையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்- பாதுகாப்பு தரப்பு ஏற்படுத்தியது..

வௌ்ளவத்தை பிரதேசத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் அதனை கண்டு மக்கள் அச்சப்பட அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]