வோட் பிளேஸ் பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு 7 வோட் பிளேஸ் பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணிக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

குறித்த எதிர்ப்பு பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.