முகப்பு Life Style வோட்கா பேஷியல் மூலம் பெண்களின் முகம் அழகாகுமாம்

வோட்கா பேஷியல் மூலம் பெண்களின் முகம் அழகாகுமாம்

வோட்கா பேஷியல் மூலம் பெண்களின் முகம் அழகாகும் என கூறப்படுகின்றது. பல பேஷியல்களை பார்த்துள்ள பெண்களுக்கு இது புதுவித தகவல் தான்.

பெண்கள் சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்வதற்காக பல பேஷியல் முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்தவகையில், தக்காளி பேஷியல், கோல்டன் பேஷியல், பப்பாயா பேஷியல் என்று பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன.

வோட்கா பேஷியல் செய்வதற்காக அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தவாறே இந்த பேஷியலை செய்யலாம்.

அதாவது இரவு தூங்குவதற்கு முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன பிரீஸரில் கவனமாக வையுங்கள்.

காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து. வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com