முகப்பு News India வை.கோவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு

வை.கோவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக இந்தியாவில் நடைமுறையில் உள்ள தடையை நீக்குமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுசெயலாளர் வை.கோவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசாங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து, நீடித்து வருகின்ற நிலையில், இதற்கு எதிராக அவர் சென்னை மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசாங்கத்தின் தரப்பில் விளக்களிப்பு வழங்கப்பட்டது.

இதில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரும் அதிகாரம் வை.கோவிற்கு இல்லை என்றும், இதனை விடுதலைப் புலிகள் இயக்கமே கோர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 14ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com