வைரலாகும் யாஷிகா வீடியோ- செம்ம கடுப்பில் ரசிகர்கள் வீடியோ உள்ளே

பிக்பாஸ் புகழ் யாஷிகாவின் மொக்க ஜோக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் இந்த வருடம் நடத்தப்பட்ட பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவராலும் அறியப்படும் நபராக மாறினார். பிக்பாஸ் போட்டியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது கடி ஜோக்குகளை அடித்து வந்த யாஷிகா ஆனந்த் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் மொக்க ஜோக் என்று ஓரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “என் செல்போன் கீழ போட்டு உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு’ என ஜோக்கடித்துள்ளார்.

இந்தப் பதிவை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவுக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘போதும் யாஷிகா முடியவில்லை’ எனக் கதறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]