வைரலாகும் பாபி சிம்ஹாவின் குழந்தையின் புகைப்படம்!!

நடிகா் பாபி சிம்ஹாவின் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவா் நடிகா் பாபி சிம்ஹா. தொடா்ந்து ஜிகா்தண்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளாா். மிகவும் குறுகிய காலத்திலேயே தேசிய விருதையும் இவா் தட்டிச் சென்றாா்.

இந்நிலையில் கடந்த 2016ல் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். அடுத்த வருடமே இவா்கள் விவாகரத்து பெற உள்ளதாக வதந்திகள் பரவின. ஆதனை பொய்யாக்கிய காதல் ஜோடிக்கு தற்போது முத்ரா சிம்ஹா என்ற பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் பாபி சிம்ஹாவின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். அப்போது எடுக்கப்பட்ட முத்ரா சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]