முகப்பு Cinema வைரலாகும் சிவகார்த்திகேயன் மகள் பாட்டு ‘வாயாடி பெத்த புள்ள’- வீடியோ உள்ளே

வைரலாகும் சிவகார்த்திகேயன் மகள் பாட்டு ‘வாயாடி பெத்த புள்ள’- வீடியோ உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா ‘கனா’ எனும் படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதன் வீடியோ தற்போது யூடுப்பில் வைரலாகியுள்ளது.

ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகரும் நடிகருமான அருண் ராஜா இயக்கும் இப்படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘வாயாடி பெத்த புள்ள’ எனும் பாடலை பாடியுள்ளார்.

அப்பாவும் மகளும் சேர்ந்து பாடியுள்ள வீடியோவை சோனி மியூஸிக் நேற்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com