முகப்பு Cinema வைரலாகும் சல்மான்கானின் பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோ உள்ளே

வைரலாகும் சல்மான்கானின் பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோ உள்ளே

மத்திய உள்துறை இணையமைச்சர் விடுத்த சவாலை ஏற்று நடிகர் சல்மான்கான் வெளியிட்ட பிட்னெஸ் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் தற்போது அலி அப்பாஸ் இயக்கும் பாரத் திரைபடத்தின் படபிடிப்பில் பயங்கர பிசியாகவுள்ளார். இதில், மாறுபட்ட 5 வேடங்களில் நடித்து வருகிறார். இதில் கேத்ரீனா கைஃப், திஷா பட்டானி, தபு மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சில மாதங்களாக சமூக வலைதளங்களில் திரையுல பிரபலங்களான தீபிகா படுகோன், ஹிர்த்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா முதல் கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அரசியல் பிரமுகர்கள் மோடி, ராஜ்யவர்தன் வரை பிட்டான இந்தியாவை உருவாக்க பிட்னெஸ் சேலஞ்ச் என்ற உடற்பயிற்சி சாவலை மேற்கொண்டு அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ, நடிகர் சல்மான்கானுக்கு பிட்னெஸ் சவால் விடுத்தார். சாவாலை ஏற்ற சல்மான், ஜிம்மில் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்து தனது பிட்னெஸ் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.

இதில், அருமையான பிட்னெஸ் கேம்பெயின் ராஜ்யவர்தன் ரத்தோர். உங்களது சாவலை ஏற்கிறேன் கிரண் ரஜிஜூ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதைகண்ட ரசிகர்கள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘அருமை சல்மான் கான் உங்களது இந்த விடியோ மில்லியன் கணக்கான மக்களை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஊக்கப்படுத்தும். எனது சவாலை ஏற்றதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com