வைத்தியர் சங்கமும் மாணவர்களும் தமது வேலையை செய்ய வேண்டும் : தயாசிறி எச்சரிக்கை

வைத்தியர் சங்கமும் மாணவர்களும் தமது வேலையை செய்ய வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

சைட்டம் விவகாரம் தொடர்பில் அரசு ஆழமாக கலந்துரையாடி வருகிறது. தற்போது நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியாசாலைக்கான இழப்பீடு வழங்கப்படும். இந்நிலையில் இந்தக் கல்லூரின் நிர்வாகத்தை விரிவாக்கல் தொர்பில் அரசு தற்போது கலந்துரையாடி வருகிறது.

அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்வரும் அமைச்சரவை கூட்டங்களில் விளக்கமளிப்பர். பின்னர் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். தீர்மானம் எடுக்கப்படும் போது எல்லோருரையும் 100வீதம் திருப்தியடைய வைக்க முடியாது. சிலருக்கு அது இழப்பீடாக அமையலாம்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அவர்களின் வேலை என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அதன் வேலை என்னவொன்று தெரிந்துகொள்ள வேண்டும். கடந்து விட்டுச்சென்ற மற்றுமொரு கும்பைமேடு விவகாரம்தான். இந்த கல்லூரி கடந்த அரசின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனவே, மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]