வைத்தியர்கள் வேலைநிறுத்தம் நாளை ஆரம்பம்

சுழற்சி முறை வேலை நிறுத்தம் ஒன்றை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாளை காலை முதல் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் எனவும் வேலைநிறுத்தம் ஒருநாளுக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.