வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் சிரமம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூருடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து வருகை தந்திருந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]