வைத்தியருக்கு எதிராக தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட மக்கள்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை தோட்டத்தில் தோட்ட வைத்திய அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அத் தோட்ட மக்கள் வைத்திய அதிகாரியின் உருவ பொம்மை மற்றும் டயர்களை எரித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாகசேனை தோட்ட வைத்தியர் அத்தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு உரிய வைத்திய சேவைகளை வழங்குவதில்லை எனவும், சுகாதார நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டி சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அத்தோடு, இந்த தோட்ட வைத்தியர் தொழிலாளர்களுக்கு எதிராக தேவையற்ற விடயங்களில் தலையிட்டு அவர்களை பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஆர்ப்பாட்டகாரர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உரிய காலப்பகுதியில் வைத்தியர் தொடர்பான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள் ஈடுப்படபோவதாக அறிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]