வைத்தியசாலை ஊழியர்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பு

கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் நாளைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

பதுளை மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளை சேர்ந்த ஊழியர்களே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை அந்த சங்கத்தின் பிரதமச் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் இடம்பெறும் தேவையற்ற இடமாற்றங்களை நிறுத்துதல், வெலிமடை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் மேலதி நேர கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]