வேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர் வரை சீரழித்த கொடுமை!

வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி என்ற பெண் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகைக்கு சிறுமியை வேளாங்கன்னி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மீண்டும் சிறுமி வேலைக்கு செல்ல மறுத்த போது பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

இதன் போது சிறுமி  தன்னை ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும், ஆபாசப் படம் எடுத்து மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி கொடுமைப் படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

பின்னர் பொலிஸில் புகார் செய்துள்ளனர். புகாரில், வேளாங்கன்னி என்பவர் குழந்தை பார்க்கும் வேலை என கூறி ஒரு வீட்டில் சிறுமியை வேலைக்கு சேர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இரு மாதங்கள் கழித்து வேளாங்கன்னியின் நண்பர்கள் சில சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டதாகவும், தாங்கள் சொல்கிறபடி கேட்கவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் ஊரில் தனியாக இருக்கும் தாய் தந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியுள்ளனர்.

கடந்த 4 மாதங்களில் மட்டும் சென்னை 100 க்கும் மேற்பட்ட நபர்கள் தன்னிடம் அத்துமீறியதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வேளாங்கன்னியையும் அவரது நண்பர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]