வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஜிஎஸ்டி (GST) மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் திகதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது, சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படியாத விஷயம்.

மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது. இதனை பொருட்டில் கொண்டு வருகிற திங்கள் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Vishal

மேலும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அன்புடன் வலியுறுத்துகிறோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]