வேலைக்காரன் – டப்பிங் பணிகள் துவங்கியது

ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக வர்த்தகத்தினர் இடையேயும் பெரிதும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள ” வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பாஹாத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

இந்திய திரை உலகமே  வியந்து பாராட்டிய  “தனி ஒருவன்” படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் இது. செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி நவராத்திரியை முன்னிட்டு வெளி ஆகும் “வேலைக்காரன்”  படத்தின் டப்பிங் பணிகள் ஒரு பூஜையுடன் துவங்கியது.