முகப்பு News நவோதயா மக்கள் முன்னணியின் வேலனை வேணியன் காலமானார்

நவோதயா மக்கள் முன்னணியின் வேலனை வேணியன் காலமானார்

நவோதயா மக்கள் முன்னணியின் அரசியல் குழு தலைவரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான வேலனை வேணியன் தனது 80ஆவது வயதில் காலமானார்.

மாரடைப்பு காரணமாக அன்னார் காலமானதாக நவோதயா மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அன்னாரின் பூதவுடல், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

3 தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ள வேலணை வேணியன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலணை வேணியன் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com