வேற்று மதத்தில் திருமணம்- மகளை கடத்தி மன நல காப்பகத்தில் சேர்த்த தாய்!

வேற்று மதத்தில் திருமணம் செய்த காரணத்தினால் சொந்த மகளை தாயார் கடத்தி சென்று மன நல காப்பகத்தில் சேர்த்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த விவேக் இவரின் மனைவி நஸ்லா (இஸ்லாம்). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனாலும் இவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை. இறுதியில் பின்னர் விவேக் தமது பெற்றோரிடம் இருந்து அனுமதி வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 12 ஆம் திகதி கோழிக்கோடு பகுதியில் உள்ள கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி பேருந்து நிலையத்தில் இருந்து அவரது தாயாரால்  காரில் கடத்தப்பட்ட நஸ்லாவை தமிழகத்தில் உள்ள ஏர்வாடி மன நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இரண்டு நாட்கள் அந்த காப்பகத்தில் தவித்த அவரை மன நலம் குன்றியதால் தான் சிகிச்சைக்கு கொண்டுவந்ததாக அங்குள்ள மருத்துவரிடம் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விவேக் அளித்த ஆள்க்கொணர்வு மனுவை அடுத்து நஸ்லாவை அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வாழ்வதென்றால் அது தமது கணவருடன் மட்டுமே என நஸ்லா நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்ததை அடுத்து, திருமண ஆவணங்களையும் பரிசோதித்த நீதிமன்றம் நஸ்லாவை கணவர் விவேக்குடன் அனுப்பி வைத்தது.

மனைவியை கடத்தி சென்றதாக விவேக் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நஸ்லாவின் தாயாரையும் உறவினரையும் பொலிசார் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]om