வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனுக்கு பிறப்புறுப்பில் பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

மதுரையில் கணவரின் அந்தரங்க உறுப்பில் எண்ணெய் கொதிக்க வைத்து ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மனைவி சசிகலா.

இந்நிலையில் விரட்டி பாது என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சசிகலா கணவனிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் பரமேஸ்வரன் வீட்டுக்கு வருவதை நிறுத்தியுள்ளார். பிறகு சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இதுகுறித்து அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் பரமேஸ்வரன் இதை கேட்காமல் தனது பழக்கத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் சசிகலா தனது கணவனிடம் மென்மையாக பேசி தன்னுடன் வசிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.இதனை நம்பி அவரும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து பரமேஸ்வரன் நன்றாக தூங்கி கொண்டிருக்கும்போது, எண்ணெயை கொதிக்க வைத்து அவரது அந்தரங்க உறுப்பில் ஊற்றியுள்ளார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவை போலீசார் கைது செய்துள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]