வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்…!

நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி ‘ என்று சொல்லிவிட்டனர். பண்டைய காலம் முதலே நம்மை பாதுகாத்து வரும் ஒரு மூலிகை என்றால் அது வேப்பிலைதான்.

கசப்பு சுவையுடன் இருந்தாலும் இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. ஆயுர்வேத மருத்துவத்தில் தொடங்கி தற்கால நவீன மருத்துவம் வரையிலும் வேம்பின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

நாம் மறந்துபோன வேம்பையும், அதன் இன்றியமையாத நன்மைகளையும் இங்கு பார்க்கலாம்.

வீட்டு வைத்தியம் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு முதலில் வரும் மூலிகை வேப்பிலைதான். வேப்பமரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படக்கூடியதுதான். இல்லை, தண்டு, காய், பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தது.

தினமும் சிறிதளவு வேப்பிலை எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியாயத்திற்கு நல்லது. ஆனால் அதை ஆண்டு முழுவதும் செய்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சித்திரை மாதம் தினமும் வேப்பிலை சாப்பிடுவது கோடைகால நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் வேப்பிலையை எடுத்துக்கொள்வது இரத்தத்தை சுத்திகரிக்கும், உடலில் உள்ள நச்சு பொருட்களை நீக்கும் இதன் பலன் உங்கள் முகத்தில் தெரியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பின் மூலம் இது பூச்சிக்கடிகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

பருவநிலையில் ஏற்படும் மாற்றம் உங்கள் முடியின் மீதும் உச்சந்தலையின் மீதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை குணப்படுத்தும் எளிய வழி வேப்பிலையை சாப்பிடுவதுதான். தேவைப்பட்டால், ஷாம்பூ உபயோகப்படுத்துவதற்கு பதிலாக வேப்பிலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து குளித்தால் இந்த பிரச்சினைகளில் இருந்து எளிதில் தப்பி விடலாம்.

வேப்பிலையில் ஆண்டிமைகிரேஸ், ஆண்டிவைரல் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தினமும் காலை வெறும்வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை தடுக்கும்.

வெளியிடங்களில் உணவு உண்ணும்போது உணவு எவ்வளவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. இந்த சூழ்நிலையில் உங்கள் வயிறை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் வேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உங்கள் செரிமானத்தை அதிகரிப்பதோடு உங்கள் குடல்களில் உள்ள பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.

வேப்பங்குச்சியில் பல் துலக்குவது நாம் பழங்காலம் முதலே செய்துவந்தது. இயற்கையாகவே உள்ள ஆன்டிவைரல் மற்றும் கிருமிகளுக்கு எதிராக போராடும் குணம் உங்கள் பற்களை பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி உங்கள் உமிழ்நீரின் தரத்தையும் இது பாதுகாக்கிறது. வேப்பிலையை மெள்ளுவது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

கண்களில் தொடர்ந்து எரிச்சல் மற்றும் வலி இருந்தால் அதற்கு வேப்பிலை ஒரு சிறந்த மருந்தாகும். சுத்தமான நீரில் சில வேப்பிலைகளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் அந்த நீரை ஆறவிடவும். சிறிது நேரம் கழித்து இந்த நீரில் முகம் கழுவவும். தினமும் இதனை மூன்று முறை செய்துவந்தால் உங்கள் கண் வலி விரைவில் குணமடையும்.

பருவநிலை மாறும்போது தொண்டையில் புண்கள் ஏற்படுவது சகஜம்தான். இதற்கு காரணம் காற்றில் பரவும் பாக்டீரியாக்கள்தான். வேப்பிலை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளிப்பது இதிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

பூஞ்சை தொற்றுகள் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர்ந்து வேப்பிலை சாப்பிடுவது உங்களை பூஞ்சை தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதோடு சருமம் மற்றும் முடியில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்களை அழிக்கிறது.

உங்களுக்கு காது தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வேப்பிலையை கெட்டியாக அரைத்து அதனுடன் தேனை சேர்த்து பயன்படுத்தினால் அனைத்து காது வலிகளும் நீங்கிவிடும்.

தொடர்ந்து வேப்பிலை சாப்பிடுவது நம் உடலுக்கு தேவையான இன்சுலினை கிடைக்க செய்கிறது. இதன் விளைவாக நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]