முகப்பு News Local News வேதன ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை

வேதன ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை

அனைத்து அரச பணியாளர்களினதும் வேதனத்தை அதிகரிப்பதற்கும் வேதனம் தொடர்பான முரண்பாடுகளை நீக்குவதற்குமான வேதன ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அமைச்சரவையில் இன்று இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

தொடரூந்து திணைக்களம் உட்பட அரச நிறுவனங்களின் வேதன முரண்பாடுகளை நீக்குவது உள்ளிட்ட விடயங்களை இதில் ஆராய்வதுடன், அவை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பணி இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், வேதன அதிகரிப்பு தொடர்பில் பரிந்துரைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையும் இந்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும்.

கடந்த எட்டாம் திகதி தொடரூந்து தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புடன், அரச பணியாளர்களின் வேதன முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமாகியிருந்தன.

வேதன முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, தொடரூந்து தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் முறையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com