முகப்பு News Local News வேதன அதிகரிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அஜித் பீ பெரேரா

வேதன அதிகரிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அஜித் பீ பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், பிரதிமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வேதன அதிகரிப்புக்கு, ராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், மக்களிடம் இருந்து அறவிடப்படும் பணத்தில் இருந்து கடனை அடைக்க முற்படும் நிலையில், இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்புக்கு தாம் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த அரசாங்கம் எப்போதுமே மோசமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது நாட்டு மக்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு என்பது சாதாரண விடயமல்ல.

அதற்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் அனைத்திற்கும் வரி அறிவிடுகின்றது.

மூச்சை உள்வாங்குவதற்கும் வெளிவிடுவதற்கும் மாத்திரமே வரி அறவிடாமல் உள்ளது.

எதிர்வரும் தினங்களில் நாய் வளர்ப்புக்கும் அரசாங்கம் வரி அறவிடும் எனவும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com