வேதனம் குறித்த கலந்துரையாடல் கொழும்பில்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இற்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள், மலையக சமுக ஆய்வு மையம், மலையக இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தமிழர் பண்பாட்டு பேரவை என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன.

கொழும்பு வெள்ளவத்தை புனித லோரன்ஸ் தேவாலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]