வேண்டுதலை நிறைவேற்றவே தர்காவிற்கு சென்றேன்! குறளரசன் இப்படி கூறிவிட்டாரே?

நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரரின் இரண்டாவது மகன் குறளரசன் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வந்தன.

இது தொடர்பில் தற்போது குறளரசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு வேண்டுதலை நிறைவேற்றவே அண்ணாசாலை தர்காவிற்கு சென்றேன். கூடவே அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். இதற்கு முன் இந்த தர்காவிற்கு சென்றிருக்கிறேன்.

இப்போது வீடியோ வெளியானதால் முஸ்லிமாக மதமாறியதாக செய்திகளை பரப்பிவிட்டார்கள். அண்ணாசாலை தர்காவிற்கு எல்லா மதத்தினரும் செல்வார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]