வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

மஹரகம நகர சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்மை தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மனுக்களும் இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.