வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை நாளை நிறைவு

341 உள்ளூராட்சிமன்றங்களுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைய, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

341 உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தல் ஆகியன, இரண்டு கட்டங்களாக இடம்பெற்றன.
முதல் கட்டப் பணிகள், டிசெம்பர் 14ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

இதன்போது, 93 உள்ளூராட்சிமன்றங்களுக்கான, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட, 497 வேட்புமனுக்களில் பல்வேறு காரணங்களால் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அத்துடன், வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கை, 18ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த நடவடிக்கை, நாறை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 17 மாநகரசபைகள், 23 நகர சபைக், 28 பிரதேச சபைகளுக்கு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]