வேட்பாளர் வீட்டில் தீ பரவல்

அக்கரபத்தனை பிரதேசபையில் தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளருடைய வீட்டில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று இரவு 09.15மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போபத்தலாவ வலாகம்பபுற கொலனியில் அமைக்கபட்டிருந்த குறித்த வீட்டில் ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் ஏறிந்து சாம்பராகியுள்ளதாகவும், தீப்பரவலின் போது, வீட்டில் எவரும் இருக்கவில்லையென அக்கரபத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.