வேட்பாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைது

வேட்பாளர்கள்

யாழ்ப்பாணம்; தேர்தல் காலத்தில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன், தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

54 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 15 மாதங்களாக விளக்கமறியலில் உள்ள நபர் ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை வழக்கு நேற்று (22) யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போதே, தேர்தல் காலம் என்பதனால், பாரிய குற்றச்செயல்களான கொலை, கொள்ளை கற்பழிப்பு மற்றும் போதைவஸ்து விற்பனையாளர்கள், வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்க முடியாது.

ஜனநாயக ரீதியான வன்முறைகளற்ற தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.
ஆந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களும் தமது பங்களிப்பினைச் செலுத்தும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பிணைகள் யாவும் ரத்துச் செய்யப்படும்.

தேர்தல் வன்முறைகள் யாவும் பாரிய குற்றங்களாக காணப்பட்டாலும், பொலிஸார் தேர்தல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருவதனால், யாழ்ப்பாணத்தில் பாரிய தேர்தல் வன்முறைகள் இடம்பெறவில்லை.
இருந்தும், தேர்தல் காலம் ஆகையினால், பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், மீண்டும் வன்முறைகளில் ஈடுபட முயற்சி செய்யக்கூடும் என்பதற்கான பிணை மனுவினை நிராரிப்பதுடன், தேர்தல் வன்முறைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டாலும், கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும், அவர்களை தேர்தல் நிறைவுபெற்ற பின்னர் விடுதலை செய்யுமாறும் பொலிஸாருக்கு யாழ்;.மேல்நீதிமன்ற நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]