வேட்டி அவிழ்ந்த விழுவது கூட தெரியாமல் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய நடிகர் சக்தி- வீடியோ உள்ளே

இயக்குநர் வாசுவின் மகன் சக்தி குடித்துவிட்டு செம போதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் சக்தி 11 படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் பட்டபகலில் நண்பருடன் மூக்கு முட்ட குடித்து விட்டு அவரது போர்டு காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார் நடிகர் சக்தி. இளங்கோவடிகள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஆல்டோ காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அவரது காரை அங்குள்ள இளைஞர்கள் சிலர் விரட்டி பிடித்தனர்.

அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்த விழுவது கூட தெரியாமல், நிற்ககூட மதியில்லாத நிலையில் தள்ளாடி விழுந்த நடிகர் சக்தியை இளைஞர் ஒருவர் தாங்கிப்பிடித்தார்.

சக்தியுடன் வந்தவர், காரை எடுத்து செல்ல முற்படுகையில் அங்கிருந்த நபர் ஒருவர் பணக்காரன் என்ற திமிரா என கேள்வி கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட் சக்தி, அதன்பின்னர் விசாரணைக்கு பிறகு அனுப்பப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]