வேகமாக துரத்திய ரசிகர்கள்; வேண்டுகோள் விடுத்த விஜய் –வைரல் வீடியோ!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி-63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையப்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.

படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வருவதால் அங்கு விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். அங்கிருந்து வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது ரசிகர்கள் சிலர் அவரை பைக்கில் வேகமாக பின் தொடர அசம்பாவிதம் ஏற்பட்டு விடகூடாது என காரின் வேகத்தை குறைப்பதோடு, காரின் கண்ணாடியை இறக்கி தன்னை பின் தொடர வேண்டாம் என்று கையசைத்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய்.

இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]