‘வெள்ளவத்தை’யில் ரயிலில் மோதி ஒருவர் பலி

வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ரயிலில் மோதிய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.