வெள்ளவத்தை கட்டம் இடிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு அவசியம் : இ.தொ.கா. அரசுக்கு கோரிக்கை

வெள்ளவத்தையில் ஐந்துமாடி கட்டடம் இடிந்துவிழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன், 21பேர் காயமடைந்த சம்பவம் பெரும் வர்த்தத்திற்குரியது. சம்பவதிற்குகட்டட உரிமையாளரை மட்டுமின்றி இக்கட்டட நிர்மானப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்காது அனுமதியளித்த அரசாங்க அதிகாரி அனைவரின் மீதும் கடுமையான சட்டப்படிநடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயமானது என்று ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலமே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான் சம்பவங்களை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

மலையக இளைஞர்கள் பொருளாதார சுமையினாலே வேலைவாய்ப்புத் தேடி தலைநகரத்தை நோக்கி வருகின்றனர். இவ்வாறு மலையகத்திலிருந்து வருகைத்தரும் இளைஞர்களுக்கு முழுபாதுகாப்வை வழங்கவேண்டியது அரசின் கடமையாகும். மலையக இளைஞர்களின் பாதுகாப்பிலும் நலனிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் அதிக கவனம் செலுத்திவருகிறது.

வெள்ளவத்தை கட்டம்

நஷ்டஈடு என்பது பாதிக்கப்பட் டகுடும்பங்களுக்கு ஈடு கிடையாது. இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு அரசு இச்சம்பவத்திற்கு பொறுப்பு கூறவேண்டிய அசமந்தபோக்கில் செய்யப்ட்டவர்களின் மூலமாக பெறுமளவனான நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]