வெள்ளவத்தை அனர்த்தம்: விசேட விசாரணைக்கு பணிப்பு

வெள்ளவத்தை பிரதேசத்தில் 6 மாடிக் கட்டடம் நேற்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ பணிப்புரைவிடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை

விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 14 பேர் களுபோவில வைத்தியசாலையிலும், ஏனைய 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அனர்த்தம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ,

அமைச்சர் வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஹேமந்த பாலச்சந்திரவுக்கு உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ளேன்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் விசேட விசாரணைக் குழுவொன்று விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளது எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]