வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் ஜனாதிபதி கண்டிப்பு

லண்டனில் உள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நீக்கியதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை கண்டித்துள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணி இடைநிறுத்தம் செய்வதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தம்முடன் கலந்தாலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விவகாரத்தில் ஜனாதிபதியை தலையிடுமாறு முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேற்குலகையும், புலம்பெயர் தமிழர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட்டுள்ளதால், அவசரமாகத் தலையீடு செய்யுமாறு தாம் சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை விடுத்ததை விஜேதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]