வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாடுகளில் தாமதம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்ப திவு நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. விமான நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக மறு அறிவித்தல் வரை பணிகள் இடைநிறுத்தப்படுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பணியகத்துக்கு செல்லும் இலங்கையர்கள் பதிவுசெய்தல் மற்றும் பதிவுகளை புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு , பிரதான அலுவலகம் அல்லது பிரதேச அலுவலகங்களை நாட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.