வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வர நல்லிணக்கம் அவசியம் : இரா.சம்பந்தன்

வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர நல்லிணக்கம் அவசியமானதாகும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மெக்ஹேயிஸர் விளையாட்டரங்களில் நேற்று நடைபெற்ற யொவுன்புர நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நல்லிணக்கம் அத்தியாவசியமானது. இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் . இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமாக அதனை நாட்டு மக்கள் மத்தியிலும் மேம்படுத்தமுடியும்.

யொவுன்புர 2017 ஆம் ஆண்டு இளைஞர் முகாம் நாட்டின் பல்வேறு இளைஞர்கள் சந்திப்பதற்கு களமாக அமைந்துள்ளது. இதனை திருகோணமலையில் நடத்த திட்டமிட்டதை நான் வரவேற்கின்றேன்.

வெளிநாட்டு முதலீடுகள்

“எதிர்காலத்தை ஆரம்பிப்போம்’ என்னும் தொனிப்பொருளில் ஆரம்பமான இந்த நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 5500 இளைஞர்களும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 100 இளைஞர்களும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் ரா.சம்பந்தனுக்கு யொவுன்புர நிகழ்வில் நினைவுப்பரிசு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ, கிழக்கு மாகாண முதலைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஏ.எல். முஹம்மட் நஸீர், கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, அமைச்சின் செயலாளர் M.ஐ.M. ரவீக், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான எறந்திக்க வெலியங்கே , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]