வெளிநாட்டு பெண் ஒருவர் கைது

வீசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, வாலுகாராம மாவத்தை பகுதியில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

35 வயதுடைய சீன நாட்டு பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணை இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]